ஒரே பரபரப்பு, ஓ… னு கத்திடனும்ங்கற உணர்வு, இன்னைக்கு நாள் சரியாவே போகாத கடுப்பு….

இதுதாங்க மனுஅழுத்தத்தோட ஆரம்ப நிலை, இன்னைக்கு இருக்க வேகமான உலக நடப்புல மன அழுத்தம் அப்படிங்கறது 5 வயது குழந்தைல இருந்து 60 வயது பெரியவங்க வரை எல்லோருக்கும் இருக்குனு சமீபத்திய ஆய்வு சொல்லுது. இந்த மன அழுத்தம் ஒரு கட்டத்துல அதிகரிக்கும் போது மரணம் வரை கொண்டு போகலாம்ங்கறது ஒரு அதிர்ச்சியான உண்மை.

டென்ஷன, மாத்திரை மருந்து எடுத்துக்காம நமக்குப் பிடிச்ச வகைல சாந்தப்படுத்திக்கறது எப்படின்னு சொல்றோம்….

1. ரொம்ப யோசிக்காதீங்க…

பொதுவாவே நாம கோபமா இருக்கும் போதும் கவலையா இருக்கும் போதும் வழக்கத்தை விட கொஞ்சம் ஓவராதான் யோசிப்போம். “சாந்தம் கலக நாஸ்தி” அப்படின்னு பெரியவங்க சொல்லி வெச்சது இந்த விஷயத்துக்கும் சரியா பொருந்தும். டென்ஷனா உணர்ந்தீங்கனா கொஞ்ச நேரத்துக்கு எதுவும் யோசிக்காதீங்க, எதுவும் நீங்க நெனச்சது போல நடக்கலனு தோனினா, இப்படி மாறி நடக்கறதுக்கு ஏதேனும்
நல்ல காரணம் இருக்கும்னு மனசுக்கு சொல்லுங்க. நம் மனசு ஆரோக்கியத்துல “Positive Thinking” அதாவது “எல்லாம்  நன்மைகே” என்பதுல நம்பிக்கை வைப்பது ரொம்ப முக்கியமான ஒன்னு. இது பேச சரி மத்தப்படி கஷ்டம்னு சொல்றீங்களா, அடுத்த டிப்ஸ் படிங்க…

2. குட்டீஸ்…

குழந்தையோட குழந்தையா விளையாடி பாருங்க, அவங்க உலகத்துக்கும் கொஞ்சம் அறிமுகமாகுங்க. கடன், டெட்லைன், கடமை  அப்படின்னு எத்தனை அழுத்தங்கள் சிந்தனைகள் இருந்தாலும் குறைஞ்சது 30 நிமிடம் மழலை மொழி கேட்டால், சிறுவர்களோடு  சிறுவர்களா விளையாடினா நீங்க புதுசா உணர்வதோட டென்ஷனும் பறந்துபோய்டும். உங்க சவுகரியத்துக்கு ஏத்தது போல் வாரம்  ஒருமுறை இல்லைனா மாதம் ஒருமுறை உங்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் இல்லம், முதியவர்கள் இல்லம் (அவங்களும் குழந்தைங்க தானே..) அருகில் இருக்க சிறுவர் பூங்கா விசிட் பண்ணுங்க…

3. கொட்டி தீர்த்துடுங்க…

“வாய் விட்டு சிரிச்சா, நோய் விட்டு போகும்”…. இது சிரிப்புக்கு மட்டும் இல்லங்க மன அழுத்தத்துக்கும் பொருந்தும். பேசவே நேரம் கிடைக்காத இந்த ஓட்டமான வாழ்க்கை சூழல் யார்கிட்ட பொறுமையா யார்கிட்ட பேசுறதுனு யோசிக்கிறீங்க ரைட்தான்…. ஆனா மனசு இருந்தா மார்க்கபந்து… பேசி தான் ஆகனும். பலமுறை, மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்காம இருக்கறதுக்கு முதல் காரணம் நேரம் இல்லாமல் இல்ல, நமக்குள்ள இருக்க தயக்கத்துனால… சரி யார் கிட்ட பேசறது? இதுக்காக மனோதத்துவ நிபுணர்கிட்ட போக வேண்டாம்…. உங்க அப்பா அம்மா கிட்ட, தாத்தா பாட்டி, உங்களுக்குத் தெரிஞ்சவங்க, ஃப்ரெண்ட்ஸ் (பெஸ்ட் சாய்ஸ்) கிட்ட பேசுங்க… யாரும் இல்லையா…. ஒரு நோட் பேனா எடுத்துக்கோங்க எழுதி தீத்துடுங்க.

4. பச்சை நிறமே… பச்சை நிறமே

டென்ஷன் குறைக்க நிறங்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு. சில நிறங்கள் நம் மனசை சாந்தப்படுத்தும். பச்சை நிறம் அதுபோன்ற நிறம் தான். உங்க அலுவலக மேசைல பச்சை நிறமுள்ள கலர் பேப்பர், சீனரி, செடி வைக்கலாம், உங்க அறையில் பச்சை நிறம் பூசலாம், இப்போ மார்கெட்ல ஆர்டிஃபிசியல் கிராஸ் தரை விரிப்பு கிடைக்குது… எதுவோ உங்க பார்வை படும் இடத்துல பச்சை நிறம் இருக்க செய்ங்க. இல்லையா… பக்கத்துல இருக்க பூங்காக்கு போய் கொஞ்சம் காலார நடந்துட்டு வாங்க…

5. பிடிச்சத செய்ங்க…

இதைக் கடைசியா சொன்னாலும், இதுவும் முக்கியமான ஒன்னு. நம்மை உணரும் தருணம் நமக்கு பிடிச்ச சில விஷயங்களை செய்யும் போது தான். இதுல மாத்து கருத்து இல்ல. சிலருக்கு ஓவியம் தீட்ட பிடிக்கும், சிலருக்கு நண்பர்களோட நேரம் செலவழிக்க
பிடிக்கும், சிலருக்கு பயணம் செய்ய பிடிக்கும், சிலருக்கு அமைதியா தனியா ஒரு இடத்துல இருக்கறதுக்கு பிடிக்கும்… உங்களுக்கு பிடிச்சது என்ன?… அதை செய்ங்க, நீங்க நீங்களா இருங்க….

இந்தக் கட்டுரை யூஸ்ஃபுல்லா இருந்ததா? இல்லையா…..? டென்ஷன் வேண்டாம் அடுத்த நல்ல கட்டுரைல சந்திக்கிறோம்.