பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மெரினவில் நடந்தது போராட்டமே இல்லை. அங்கு பலர் ஜாலியாக கூத்தடித்தனர் என கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறை மற்றும் நீதித்துறையை கொச்சையாக விமர்சித்து பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தவே எச்.ராஜாவை கைது செய்ய வேண்டுமென்று பல தரப்பினர் போர்க்கொடி தூக்கினர்.
திருமுருகன் காந்தியையும், சோபியாவையும் உடனடியாக கைது செய்ய சொன்ன நீதிமன்றம், எச்.ராஜாவை 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
நேற்று திண்டுகல்லில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் மெரினாவில் நடந்தது ஜல்லிக்கட்டு போராட்டமே கிடையாது. மது, மாது, பீஃப் ஆகியவை சரளமாக புழத்தில் இருந்தது என பேசினார்.

 

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தையும், இதற்காக பாடுபட்ட லட்சக்கணக்கான மக்களையும் எச்.ராஜா விமர்சித்து பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.