சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகியாக நடித்த மஞ்சிமா மோகன் கோலிவுட் திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று கோலிவுட்டின் முன்னனி இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் மஞ்சிமா காதல் வலையில் சிக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைத்த ‘ரம்’ படத்தின் ஹீரோவாக நடித்த ரிஷிகேஷை மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாகவும், இருவரும் இணைந்து சென்னையில் பல இடங்களில் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அனிருத்தின் நெருங்கிய உறவினரான ரிஷிகேஷ், மஞ்சிமாவை விரைவில் திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மஞ்சிமா மோகன் தற்போது ‘இப்படை வெல்லும்’ என்ற படத்திலும் ரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.