பிரபல நடிகர் ஹிரித்திக் ரோஷன் இவர் நடிக்க வந்த புதிதில் இவருக்கென நிறைய பெண் ரசிகைகள் கூட்டமே இருந்தது. ஹிந்தியில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே பெண் ரசிகைகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இருந்தாலும் இவரின் கஹானோ பியார் ஹை படம் வெளிவந்து வெற்றி பெற்ற 2000த்திலேயே திருமணமும் செய்தார்.

காதலித்து தன் காதலியான சுசன்னே கான் என்பவரையே மணந்து கொண்டார். இரண்டு குழந்தைகள் என மகிழ்ச்சியாக சென்ற இவரது வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்து ஆனாலும் இவர்கள் குழந்தைகள் நலனுக்காக நண்பர்களாக வாழ்வோம் என சில வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் சம்பிரதாயமாக திருமணம் செய்து கொள்ள யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.