ஹுவாய் நிறுவன் ஸ்மார்ட் போன்களில் இனி ஃபேஸ்புக் இலவச ஆப் வராது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இனிவரும் சில அப்டேட்டுகளை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்தது அதேப்போல இனிவரும் ஹுவாய் ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. தற்போது ஹூவாய் ஸ்மார்ட் போன்களில் ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் இருக்காது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஏன் மூஞ்சி இப்படி இருக்கு?என காயத்ரியை கலாய்த்த நெட்டிசன்கள்

சமீபத்தில் அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் ஹுவாய் நிறுவனத்தின் பெயரை அமெரிக்கா அறிவித்தது. அதனையடுத்து பேஸ்புக்கின் இந்த முடிவால் இப்போது ஹூவாய் ஸ்மார்ட் போன்களின் விற்பனை பெரியளவில் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கமல் பற்றி அப்போதே சொன்னார் என் தந்தை: காயத்ரி ரகுராம்

ஆனால் ஏற்கனவே விற்பனை ஆன போன்களில் தொடர்ந்து இந்த வசதிகளைப் பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.