66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் 30 வயது ஹூமா குரேஷி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படமான ‘ரஜினி 161’ படத்திற்கு பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தேர்வு பெற்றுள்ளார். இவர் அக்சயகுமாரின் ‘ஜாலி எல்.எல்.பி உள்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் ஹூமாவின் வயது வெறும் 30 மட்டுமே. முன்னதாக அவர் தனது நண்பரின் மகளான சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, நயன்தாரா, உள்ளிட்ட பல இளம் நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை மும்பையில் நடைபெறும் வகையில் உள்ளதால் பாலிவுட் ஹீரோயின் தான் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட்ட ரஞ்சித், முதலில் வித்யாபாலனை அணுகினார். ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலனுக்கு விருப்பம்தாம் எனினும் ரஞ்சித் கேட்ட தேதிகள் அவரிடம் இல்லாததால் அடுத்தகட்டமாக தற்போது ஹூமா குரேஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 28ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.