பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா சமீபத்தில் வெளியாகி நல்ல
வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்து இருப்பவர் பாலிவுட் நாயகி ஹீமா குரேஷி. இவர் தனுஷ் குறித்து ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். காலா படத்தில் நடிப்பதற்கு முன்பே நானும் தனுசும் இணைப்பில் தான் இருந்தோம் என்று பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

முதன் முதலாக தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா படத்தின் அடியெடுத்து வைத்துள்ள பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவா் ரஜினியின் காதலி சரீனாவாக காலா படத்தில் செமமாக கலக்கி இருக்கிறார். யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பாக முதல் படத்திலேயே ரஜினியுடன் நடித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  விஜயை தொடந்து இப்போது தனுஷ்

இயக்குனர் பா.ரஞ்சித் நான் நடித்த கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தை பார்த்துள்ளார். அந்த படத்தில் என்னுடைய நடிப்பு அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் எனக்கு தனுஷிடம் இருந்து தான் கால் வந்தது. எனவே தனுசும் நானும் எப்போதும் டச்சில் தான் உள்ளோம். நாங்கள் ஏற்கனவே சேர்ந்து படத்தில் நடிக்க விரும்பினோம். தனுஷ் மிக சிறந்த நடிகர். ஆனால் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டவே இல்லை. ஏனோ பல விஷயங்கள் அது தள்ளி போய் கொண்டே இருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  தனுஷ் பாராட்டிய ராட்சஷன்

இந்நிலையில் தனுஷிடம் இருந்து போன் கால் வந்ததும் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்க போகிறோம் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அதுவும் ரஜினி தான் ஹீரோ என்ற போது எல்லையில்லா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன். அதன் பிறகு நான் இயக்குனர் பா.ரஞ்சித்தை சந்தித்தேன். கதையை கேட்டவுடன் பிடித்து விட்டதால் நடிக்க உடனே முடிவு செய்தேன். மேலும் இந்த படத்தில் நான் ரஜினியை திட்டுவது போல உள்ள காட்சியில் நடிக்கும் போது தான் ரொம்பவும் பயந்தேன் என்றார் காலாவின் முன்னாள் காதலியாக நடித்த ஹூமா குரேஷி.

இதையும் படிங்க பாஸ்-  தனுஸ்ரீ புகார்- நானா படேகர் மீது எஃப் ஐ ஆர் பதிவு