திருச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி பெண்ணான உஷா பலியான சோக சம்பவம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. இதுபோன்ற மனிதம் மறந்த அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் மீண்டும் இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் இளம்பெண் உஷா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.