கணவனின் குடிப்பழக்கத்தால் மனைவி மற்றும் கணவன் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை ஓட்டேரிப் பகுதியை சேர்ந்தவர்கள் தன்ராஜ் மற்றும் தீபா தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. தன்ராஜின் தீராதக் குடிப்பழக்கத்தால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. ஆனாலும் தன்ராஜ் தனது குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை.

வழக்கம்போல நேற்றும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தன்ராஜ் மனைவியோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனால் மனமுடைந்த தீபா தன்ராஜ் தூங்கிய பிறகு மற்றொரு அறைக்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போதைத் தெளிந்து மனைவியைத் தேடிய தன்ராஜ் மனைவியின் நிலையைப் பார்த்து மனமுடைந்து தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.