சென்னையில் திருமனம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்த தம்பதிகளில் கணவர் மன உளைச்சலில் தூக்கு மாட்டி உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினர் ராஜ் மற்றும் மோகனப் பிரியா. இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் இருவரும் மருத்துவமனைகளுக்கு சென்று குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுத்துள்ளனர்.

இதன் பலனாய் சில் மாதங்களுக்கு முன்பு மோகனப் பிரியா கர்ப்பமாகியுள்ளார். இதனால் இருவரும் மகிழ்ச்சியில் இருக்க எதிர்பாராத விதமாக அந்தக் கரு கலைந்துள்ளது. இதனல் ராஜ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மனைவி மோகனப் பிரியா மருத்துவமனைக்கு சென்றிருந்த நேரமாகப் பார்த்து வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சாவதற்கு முன்பாக மனைவிக்கு வாய்ஸ் ரெக்கார்டு ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலிஸ் அவரது உடலைக் கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த தற்கொலையால் அந்த பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவியுள்ளது.