மனைவியின் கள்ளக்காதலனுடன் அப்பெண்ணின் கணவர் கட்டிப்புரண்டு சண்டை போட்ட விவகாரம் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாரமங்கலம் மேட்டுப்பட்டி பகுதியில் லாரி டிரைவர் ஒருவர் மனைவியுடன் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் ரவிக்கு அப்பெண்ணின் மீது மோகம் ஏற்பட்டது. எனவே, அடிக்கடி அவரை சந்தித்து ஆசை வார்த்தை கூறி மயக்கியுள்ளார். அதன்பின் இருவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் அப்பெண்ணின் கணவருக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். எனவே, ரவியுடன் பேசுவதை அப்பெண் நிறுத்திக் கொண்டார். எனவே, அவரை பார்க்க முடியாமல் ரவி தவித்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  மனைவிக்கு வளைகாப்பு.... தூக்கில் தொங்கிய கணவன்...

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் வீட்டின் முன்பு வந்து நின்ற ரவி, வெளியே வருமாறு அவருக்கு சிக்னல் கொடுத்தார். அப்போது அப்பெண்ணின் கணவர் அங்கே வர, அவருக்கும், ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கட்டிப்புரண்டு சாலையிலேயே சண்டை போட்டுள்ளனர். அதன்பின் பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  சமையல்காரியுடன் உல்லாசம்: மேற்குவங்க மேஸ்திரியின் லீலைகள் அம்பலம்

காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தாரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.