திருவாரூர் மாவட்டத்தில் ஒருவர் தனக்கு திருமணமான இரண்டே வாரத்தில் தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப் பூண்டியை அடுத்த செட்டிமூலையைச் சேர்ந்த 24 வயதான குமாரி என்பவருக்கும் அருகில் உள்ள தலைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த மே மாதம் 25-ஆம் தேதி திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகள் என்பதால் தனது பிறந்த வீட்டுக்கு கணவர் ராஜாவுடன் விருந்துக்கு வந்த குமாரி நேற்று தனது புகுந்த வீட்டுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

இதனையடுத்து குமாரியின் நகைகளை வாங்கி அடகு வைத்து மது அருந்தியுள்ளார் ராஜா. அதன் பின்னர் இரவு 11 மணிக்கு தனது மனைவி குமாரியை, அருகிலுள்ள தன்னுடைய நண்பர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளார் ராஜா. பின்னர் ராஜாவின் நண்பர்கள் குமாரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பிய குமாரியை ராஜா கண்மூடித்தனமாக அடித்துள்ளார். இந்த சம்பவம் குமாரியின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள ராஜாவையும், அவரது நண்பர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.