கோவையில் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவன் தன் மகனையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவையிலுள்ள சரவணம்பட்டியைச்  சேந்தவர்கள் அர்ஜுனன் மற்றும் அலமேலு தம்பதியினர். அலமேலு அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு யோகேஷ் என்ற  14 வயது மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  யூடியூப்பில் சாதனை செய்த மெர்சல் ; இதுவே முதல் விஜய் படம்

நேற்று முன் தினம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அலமேலு வீடு உள்பக்கம் பூட்டி இருக்கவே ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.  வீட்டினுள் உள்ளே தனது கணவர் தூக்கில் தொங்கியும் மகன் அருகில் இறந்தும் கிடந்துள்ளான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அலமேலு சத்தம் போட்டு அலறியுள்ளார்.  பின்னர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்து சம்பவ இடத்தில் சோதனை செய்தபோது அர்ஜுனன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஒன்னு முடிவதற்குள் இன்னொன்னா? பிரியா வரியா் அடுத்த வீடியோ!

அந்த கடிதத்தில் ‘அலமேலு வேறு ஒரு நபருக்கு அனுப்பிய தவறான குறுஞ்செய்திகளைப் படித்து தான் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாக எழுதப்பட்டிருந்தது.  தன் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தான் தூக்கில் தொங்கியதாகவும் எழுதப்பட்டிருந்தது.