மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அவரின் கணவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற விவகாரம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவர் நிவேதா என்கிற பெண்ணை காதலித்தார். ஆனால், அவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்கவில்லை. எனவே, பெற்றோரை எதிர்த்து 9 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் ஈரோட்டில் வந்து தங்கினர். முனியப்பன் ஓட்டுனராகவும், சுவேதா ஒரு சூப்பர் மார்கெட்டிலும் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், நிவேதா வேறொரு ஆணுடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. எனவே, இது தொடர்பாக முனியப்பனுக்கும், நிவேதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த முனியப்பன் மீண்டும் நிவேதாவுடன் சண்டை போட்டுள்ளார். எனவே, நிவேதா தனது தாய் விட்டிற்கு செல்ல முடிவெடுத்தார்.

எனவே, முனியப்பன் அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவர் சமாதானம் ஆகவில்லை. எனவே, உன் தாய் வீட்டுக்கு நானே அழைத்து செல்கிறேன் எனக்கூறி, இருசக்கர வாகனத்தில் நிவேதாவை முனியப்பன் அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின் ஆளில்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி நிவேதாவை கொலை செய்துள்ளார். அதன்பின்னும் ஆத்திரம் அடங்காமல் அவரது தலை, உடல் என தனித்தனியாக துண்டித்து ஒரு சாக்கில் போட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றுள்ளார்.

அப்போது ஒரு இடத்தில் நிலை தடுமாறியதால் பைக்கில் இருந்த நிவேதாவின் உடல் கீழே விழுந்தது. இதை அந்த பகுதியில் இருந்தவர்கள் கண்டி அதிர்ச்சி அடைந்து முனியப்பனை மடக்கி பிடித்து போலீசாரிடம் தகவல் கொடுத்தனர்.

முனியப்பனை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.