அரசு கொடுத்த பொங்கல் பரிசு ஆயிரத்தை தனக்கு கொடுக்காததால் மனைவியை கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உசிலம்பட்டி ஏழுமலை பகுதியில் வசிப்பவர் ராமர்(70), இவரின் மனைவி ராசாத்தி (65), ராமருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் குடிக்கு அடிமையாகவும் அவர் மாறிப்போனார். எனவே, தினமும் மனைவியிடம் பணம் கேட்டு அவர் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  மனைவியின் கள்ளக்காதலனுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட கணவன்...

இந்நிலையில், சமீபத்தில் பொங்கல் பரிசாக அரசு கொடுத்த ஆயிரத்தை ராசாத்தி வாங்கி வந்துள்ளார். மது அருந்துவதற்காக அந்த பணத்தை தனக்கு கொடுக்க வேண்டும் என கடந்த 11ம் தேதி இரவு சண்டை போட்டுள்ளார். அதன்பின் 12ம் தேதி காலையிலும் இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவே இல்லை: பிரபல நடிகை காட்டம்!

இதில் ஆத்திரமடைந்த ராமர் அருவாளை எடுத்து ராசாத்தியை வெட்டியுள்ளார். இதில் ராசாத்தி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அதன்பின் அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.