Wife Murder : மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், அவரை அடித்து கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்துர் அருகே உள்ள கொத்தாம்பாடி என்கிற கிராமத்தில் வசிப்பவர் சிங்காரம்(60). இவர் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மொத்தம் 3வது மனைவி சுமதி(40). இவர்களுக்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட வாலிபர்...

கடந்த 21ம் தேதி வீட்டின் அருகே தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார் சுமதி. அவரின் கணவர் சிங்காரத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்துனர். போலீசார் விசாரணையில் சிங்காரம் கூறியதாவது:

இதையும் படிங்க பாஸ்-  அம்மா, மனைவி, குழந்தையுடன் தல அஜித்: வெளிவராத புகைப்படங்கள்

சுமதி பல ஆண்களுடன் சகஜமாக சிரித்து பேசி வந்தாள். இது பற்றி நான் கண்டித்த போது நான் அப்படித்தான் பேசுவேன். உன்னை என்ன செய்ய முடியுமோ செய் எனக்கூறினாள். மேலும், எனக்கு சாப்பாடு கூட சரியாக போடாமல் என்னை அசிங்கமாக பேசி வந்தாள். இதனால் ஆத்திரமடைந்த நான் செங்கல் மற்றும் உருட்டுக்கட்டையால் அவளின் தலையில் ஓங்கி அடித்தேன். அதில், அவள் இறந்துவிட்டாள் என வாக்குமூலம் அளித்துள்ளார்.