நடத்தையில் சந்தேகப்பட்டு குடித்துவிட்டு வந்து மனைவியை கொன்ற கணவன் போலீஸில் சரணடைந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வசித்து வந்த தம்பதியினர் ராஜன் – அமலா. இவர்களுக்கு 5 மாதமேயான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை கலராக பிறந்ததால் ராஜன், அமலாவின் நடத்தை சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று குடித்துவிட்டு வந்த ராஜன், மனைவியின் மீதுள்ள சந்தேகத்தில் மனைவியை தலையணையால் அமுக்கி கொன்று அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து கிடப்பதை பார்த்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு உள்ளே சென்ற போது அமலா இறந்தது தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் போலீஸாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணையை துவங்கிய நிலையில் ராஜன் காட்டுமன்னார் கோவில் காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இதனால், ராஜனை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.