டெல்லியில் காய்கறி வாங்க பணம் கேட்ட மனைவியை கணவன் முத்தலாக் சொல்லி விலக்கியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

டெல்லி புறநகர் பகுதியான தாத்ரியில் சபீர் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஸைனப் என்ற மனைவி உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஸைனப் தன் கணவரிடம் காய்கறி வாங்குவதற்காக 30 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அதைக் கணவர் தரமறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு கட்டத்தில் கோபமான சபீர் நடுரோட்டில் வைத்து தன் மனைவியை நோக்கி தலாக் சொல்லி விலக்கி வைத்துள்ளார். மேலும் கணவர் தன் குடும்பத்தோடு சேர்ந்து ஸைனப்பை அடித்து உடைத்து அவர் முகத்தில் காறித் துப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதுபற்றிப் போலிஸில் புகார் அளித்துள்ளார். அதையடுத்துப் போலிஸார் சபீரைக் கைது செய்ய அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.