“நான் எதையும் இழப்பதாக நினைக்கவில்லை, நான் அவளை காதலிக்கிறேன்”…. பூரிக்கிறார் இளம் கணவன் தன் 72 மனைவியை அணைத்தபடி…. ஆமாங்க நீங்க சரியாதான் படிச்சீங்க… இந்த ஜோடி உலகத்தையே ஆச்சர்யபடுத்துறாங்க…

காதலுக்கு வயசு தடையில்ல என்ற விஷயத்த இந்த டெண்னசே நாட்டு ஜோடி வாழ்ந்து நிரூபிக்கிறாங்க… வலைதளத்துல வைரல் ஆகி வரும் அவங்களோட நேர்காணல்ல இருந்து சில துளிகள்…

“நான் அவரை முதன் முதலில் ஒரு பார்ட்டிலதான் பார்த்தேன், பார்த்ததும் தெரிஞ்சது இவர் சம்திங் ஸ்பெஷல் அப்பிடினு”…. மேலும் தொடர்ந்தார் புதுப்பெண் “கேரி என்னை விட்டு போய்டுவார்னு எனக்கு பயம் இல்ல, ஏனெனில் அவர் என்னைக் காதலிக்கிறார் என்று எனக்குத் தெரியும்”

கேரி சொல்லும் போது, அலமேடாவைப் பார்த்ததும் அவரின் துருதுரு குணம், சிரிப்பு அந்த கண்கள் என்னைக் கவர்நதது. பழக ஆரம்பித்த 2 வாரங்களில் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் குடும்பம் இதை ஏற்கவில்லை ஆனால் நான் அவரை காதலிக்கிறேன் என்பதில் உறுதியாக இருந்தேன். எங்களின் திருமண இரவு ஒரு மறக்க முடியாத அனுபவம், நான் அவரை அதிகம் விரும்புகிறேன். நான் எதையும் இழப்பதாக நினைக்கவில்லை”

கணவனவிட மனைவி 10 வயது குறைவா இருக்கலாம் ஆனா மனைவி கணவனை விட ஒரு வயசுகூட அதிகமா இருக்க கூடாதுனு நெனக்கிறது இங்க இருக்க பலரோட மைன்ட் செட்டா இருக்கு… குறிப்பா நம்ம வீட்டு பெரியவங்க.. காதலுக்கு கண்ணில்ல வயசு இல்லனு பேசினாலும் கல்யாணம்னு வரும்போது வயது பொருத்தம் பார்க்காம விடறது இல்ல… அதற்கு உதாரணம் இந்த விஷயத்துல இன்னமும் சச்சின், தனுஷ், அபிஷேக் பத்தி ஒரு வியப்பு செய்தியாதான் பார்க்கிறோம்…