நேற்று நடைபெற்ற திரையுலகினர்களின் ஆலோசனை கூட்டத்தில் சிம்புவும் கலந்து கொண்டார். நடிகர் சங்க தேர்தலுக்கு பின் விஷால் கலந்து கொண்ட கூட்டத்தில் சிம்பு கலந்து கொள்வது இதுவே முதல்முறை.

இந்த கூட்டத்தில் பேசிய சிம்பு கூறியபோது, ‘“தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது. நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள்? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குத் தெரிய வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று ஆவேசமாக கூறினார்

சிம்பு நடித்த திரைப்படம் நல்ல வசூலை கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரது ரசிகர்களே அவரை மறந்துவிட்ட நிலையில் வடிவேல் பாணியில் நானும் பெரிய நடிகன் தான் என்று சிம்பு தன்னைத்தானே புகழ்ந்து பேசியது யாருக்கும் வியப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவரது கேரக்டரே அப்படித்தானே என்கிறது கோடம்பாக்கம்