மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்னால் முடியாது. எனக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை என பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளதாக சமீபத்தில் மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் மற்றொரு தமிழ் நிறுவனமும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வருகிறது. இந்நிலையில் யார் தயாரித்தாலும் ஜெயலலிதாவாக நடிக்கப்போகும் நடிகை யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் அவரிடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகுவதையொட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான விஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை. அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என மறுத்துள்ளார்.