சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய்சேதுபதிக்கு சிறந்த வில்லன் என்ற விருது வழங்கப்பட்டது. ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி கூறியதாவது: உண்மையில் விக்ரம் வேதா’ படத்தில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை. எனக்கும் மாதவனுக்கும் சம அளவிலான கேரக்டர். நான் அந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் நிஜவாழ்க்கையிலும் நான் வில்லை. அதற்காக நான் முழு நல்லவனும் அல்ல. நான் நல்லவனும் இல்லை, நல்லவனேயும் இல்லை என்று விஜய்சேதுபதி நகைச்சுவையுடன் கூறினார். மேலும் தான் தற்போது நடித்து வரும் ‘ஜூங்கா’ திரைப்படம் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடு செதுக்கப்பட்டு வரும் படம் என்றும் அவர் தெரிவித்தார்.