நான் இன்னொரு ‘பாகுபலி’க்குத் தயார்: பிரபாஸ்

உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கான ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தப் படம் பாகுபலி. இதன் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் பெரும் வெற்றி பெற்று புகழையும் வசூலையும் உலகளவில் அள்ளிக்குவித்தது. இது ஒரு பக்கம் இருக்க எஸ்.எஸ் ராஜமௌலியின் இந்த பிரம்மாண்ட படம் எடுத்து முடிக்க 4 ஆண்டுகள் ஆனது.

பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்தின் மூலம் பெண்கள் மத்தியில் டார்லிங் என்றே கொண்டாடப்படுபவர், தற்போது பாலிவுட்டில் ரிலீசாகவுள்ள தனது ‘சாஹோ’ படத்திற்கான புரோமோஷ்னல் வேலைகளில் உள்ளார். “பாகுபலி” போன்ற பிரமாண்ட படங்களில் இனி நடிபீர்களா” என்று கேட்கப்பட்டதற்கு, “கதை சிறப்பானதாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், ஆனால் அதே போன்று தொடர்ந்து 4 ஆண்டுகள் வேலை செய்வது கடினம் 2 ஆண்டுகள் என்றால் சரி” என்று கூறியுள்ளார்.