புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் முதன்முதலாக மாதவன் இணைந்து நடித்த படம் ‘விக்ரம் வேதா’. இந்த படம் கடந்த வாரமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து மாதவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ‘நானும் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் எதிரெதிர் கேரக்டர்களில் நடித்துள்ளோம். எனவே படப்பிடிப்பு முடியும் வரை அவரை நேரில் சந்தித்து பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். அவருடன் பேசி நெருங்கி பழகிவிட்டால் பின்னர் படத்தில் அவருக்கு எதிரியாக நடிக்க கஷ்டமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு

தன்னுடைய கேரக்டர் மட்டும் நன்றாக வரும் என்று விஜய்சேதுபதி நினைத்திருந்தால் இந்த படம் வேற மாதிரி வந்திருக்கும். ஆனால் கமல் எப்படி என்னிடம் நடந்து கொண்டாரோ, அதே மாதிரி விஜய்சேதுபதி மிகவும் பக்குவத்துடன் நடந்து கொண்டார். இதனால் விஜய்சேதுபதி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது என்று மேலும் மாதவன் கூறினார்