பிரபாசுடன் நடித்தால் எனக்கு அந்த ஃபீலிங் தான் வரும். மஞ்சுலட்சுமி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சுலட்சுமி. 40 வயதை நெருங்கிவிட்ட போதிலும் இன்னும் அக்கா, அம்மா வேடங்களை ஏற்காமல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன ‘பாகுபலி 2’ படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க முதலில் ராஜமெளலி, முதலில் மஞ்சுலட்சுமியிடம் தான் பேசினார். ஆனால் பிரபாசை விட வெறும் இரண்டு வயது மட்டுமே அதிகமான தன்னால் அவருக்கு எப்படி அம்மாவாக நடிக்க முடியும் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் பின்னர் ரம்யாகிருஷ்ணன் அந்த கேரக்டருக்கு ஒப்பந்தமானார்.

தற்போது ‘பாகுபலி 2′ படம் வெளியாகி சுமார் ரூ.1600 கோடிகளை குவித்த நிலையிலும் அந்த படத்தை மிஸ் செய்தது குறித்து லட்சுமி மஞ்சு கவலைப்படவில்லை. இப்போதும் சொல்கிறேன் எனக்கு பிரபாசுடன் நடிக்கும்போது அம்மா ஃபீலிங் வராது, வேற மாதிரி ஃபீலிங் தான் வரும்’ என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.