தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை ‘வேலைநிறுத்தம்’: ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே பெப்சி அமைப்புக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையிலான பிரச்சனை அதிகரித்து கொண்டே வருகிறது. பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர்களுக்கு உரிமை உண்டு என்று விஷால் கூறியதால் பெப்சி அமைப்பு நேற்று முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இதனால் ‘காலா’, மெர்சல்’ உள்பட பல படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருதரப்பினர்களுக்கும் இருக்கும் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘எனக்கு பிடிக்காத சில சொற்களில் ‘வேலைநிறுத்தம்’ என்பதும் ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று முத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்

இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்