மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அரவிந்தசாமி, ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார். தற்போது அவர் 6 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் அரவிந்தசாமி உரையாடியபோது, ஒரு ரசிகர் அஜித் படத்தில் வில்லனாக நடிப்பீர்களா? என்ற கேட்ட கேள்விக்கு அஜித் உள்பட இனி யாருடைய படங்களிலும் வில்லனாக நடிக்க விரும்பவில்லை ‘ என்று கூறியுள்ளார்

அரவிந்தசாமி நடித்த ‘சதுரங்க வேட்டை 2, நரகாசுரன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய மூன்று படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.