ஜீவா நடித்த ‘ஜிப்ஸி’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது .

 

தமிழில் ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ஜீவா. இவர் பிரபல தயாரிப்பு நிறுவனம் ‘ சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனர் ஆர்.பி.சௌத்திரியின் இளைய மகன் ஆவார்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...

தொடர்ந்து தமிழில் ராம்,ஈ,கற்றது தமிழ்,கோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் அவருக்கு நெருங்கிய நண்பராக ஜீவா நடித்திருந்தார். மேலும் தற்போது கீ,கொரில்லா,ஜிப்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அது என்னுடையது இல்லை: அலர்ட் ஆன டிடி

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜீவாவிடம், அடுத்து எந்த பெரிய ஹீரோவிடம் நடிக்க ஆசைபடுகிறீர்கள் என்று பேட்டியாளர் கேட்டுள்ளார். அதற்கு தல அஜீத்துடன் நடிக்க ஆவலாக உள்ளேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன் என்றார்.