தனக்கு திரையுலகில் யாரும் பாலியல் தொல்லை அளித்ததில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

மீடூ மூலம் பல நடிகைகள் திரைத்துறையில் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். இதில்  இயக்குனர்கள், நடிகர்கள் என பலர் சிக்கி வருகின்றனர்.

இவ்விஷயம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை தான் திரைத்துறையில் எந்தவித பாலியல் தொல்லைகளையும் சந்தித்ததே இல்லை என அதிரடியாக கூறியிருக்கிறார்.

நடிகைகள் பலர் தொடர்ச்சியாக மீடூ புகார் கூறிவரும் நிலையில் ஐஸ்வர்யா இப்படி கூறியிருப்பது பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.