அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும், என தமிழில் சிறந்த படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை அஞ்சலி. அவரது சித்தியுடனான சொந்தப் பிரச்னைகளால் அவரது மார்கெட் சரிந்தது. திரையுலகில் இருந்து காணாமல் போனார் அஞ்சலி. மீண்டும் பலூன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரிஆகியுள்ளார். மேலும் அவரது காதலுக்கும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  'சிந்துபாத்' - விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இன்று இருக்கு சூப்பர் விருந்து!

          இந்நிலையில் அஞ்சலியின் தங்கை என்று சொல்லி ஆராத்யா என்பவர் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட அஞ்சலி ‘எனக்கு தங்கை என யாரும் இல்லை. ஒரே ஒரு அக்கா மட்டும்தான்’ என்று தனது ட்விட்டரில் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். அந்த ஆரத்யா யார் என்று விசாரித்ததில் அவர் தான் அஞ்சலி திரையுலகில் இருந்து காணாமல் போக காரணமாய் இருந்த சித்தி பாரதிதேவியின் மகளாம்.

இதையும் படிங்க பாஸ்-  ஒவியா பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க பாடலுக்கு நடனமாடிய நடிகை

          இதன்காரணமாக தான் ஆரத்யா என் தங்கையே இல்லை என அஞ்சலி அலறுகிறார். இந்நிலையில் அஞ்சலியும் ஜெய் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும்,விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கோலிவுட் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இச்செய்தி தொடர்பான விளக்கங்களையும் அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.