முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசை என நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஏற்கனவே தங்களது விருப்பங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இன்னொரு நடிகையும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்./

அவர்தான் பிரபல மலையாள நடிகை ரீமா கல்லீங்கல். இவர் தமிழில் யுவன் யுவதி என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் வெளியான சாவித்ரியின் வாழக்கை வரலாறு திரைப்படமான ‘நடிகையர் திலகம்’ நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தையும் தமிழ் உள்பட பல மொழிகளில் திரைப்படமாக்க ஒரு பெரிய நிறுவனம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.