அனிமல் ஸ்டார் என்ற பெயரில் சாம்பார் ராசன் என்பவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

‘பாட்டுக்கு நான் அடிமை’ என்கிற தலைப்பில் ராமராஜன் நடித்தது போல், இவர்  ‘மாட்டுக்கு நான் அடிமை’ என்கிற தலைப்பில் படம் எடுக்கிறார். அதில் அவரே ஹீரோ. அவருக்கு ஜோடியாக கோலி சோடாவில் நடித்த சீதா நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், கோவணம் அணிந்த படி அவர் அமர்ந்திருக்கிறார். அதுபற்றி கருத்து கூறிய அவர் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பின் கோவணம் கட்டி நடித்திருப்பது நான்தான்.  அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. சிறியவர் முதல் பெரியவர் முதல் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே எனது பெயரை சாம்பார் ராசன் என மாற்றிக்கொண்டேன். அதை அரசு கெஜட்டிலும் பதிவு செய்துவிட்டேன் என அதிரடி காட்டுகிறார்.

இப்படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. பி.கே. என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்

சினிமாவில் நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன். வேறு நடிகர்களி படங்களில் வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன். எனக்கு எந்த நடிகையுடனும் நடிக்க வேண்டும் என ஆசையில்லை. ஆனால், எதிர்காலத்தில் எல்லோரும் என்னுடன் நடிக்க வேண்டும் என விரும்புவார்கள் எனக்கூறி குபீர் சிரிப்பை வரவழைத்தார்.இப்படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு மாட்டுக்கும் ஓவ்வொரு பாஸ்வேர்ட் மூலம் அடக்குவேன் என இவர் கூறியதும் தலை சுற்றுகிறது. அனிமல் ஸ்டார் எனக் களம் இறங்கியிருக்கும் இவரை கோடம்பாக்கமும், ரசிகர்களும் எப்படி வரவேற்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.