சிரீயல் இருந்து சினிமா வந்த நடிகைகளில் சமீபத்திய வரவு பிரியா பவானி ஷங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த பிரியா, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவிலும் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். மிகையில்லாத இயல்பான நடிப்பும், அழகான சிரிப்பும் இவரது ப்ளஸ் பாயிண்ட்.மேயாத மான் பட வாய்ப்பினைத் தொடர்ந்து பிரியாவுக்கு படவாய்ப்புகள் நிறைய வருகிறதாம். ஆனால் நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கவிருப்பதாக பிரியா பவானி ஷங்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

      பெண்களை கொச்சைப்படுத்தும் படங்களிலும், ஹீரோயினை செட் ப்ராபர்ட்டி போலப் பயன்படுத்தும் படங்களில் நடிக்க மாட்டேன், நான் ஒரு ஹீரோயின் மெட்டிரியல் கிடையாது என்றும் கூறியிருக்கிறார். மேலும் க்ளாமராக நிச்சயம் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார்.தற்போது விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் மற்றொரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.