நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று வெளியானது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் வெளியாகும் முதல் படம் என்பதால் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார்.

இதனையடுத்து படத்துக்கான வரவேற்பு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நேற்று சத்தியம் தியேட்டருக்கு வந்த இயக்குனர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்களை பேசிய அவர் ரஜினியின் அரசியலுக்காக இந்த படம் எடுக்கப்படவில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்ட படம். மக்கள் பிரச்சினையைப் பேசுவதுதான் அரசியல் நோக்கம். அதனால் நான் பேசுவது அரசியல் குறித்துதான் இருக்கும் என கூறினார்.

பின்னர் நீங்கள் இயக்குனரா, அரசியல்வாதியா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காத ரஞ்சித், நான் அரசியல்வாதிதான் என்றார். மேலும், ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன், மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முரண்படுவேன் என்றார்.