அரசியலுக்கு வந்தால் ரஜினியையும் எதிர்ப்பேன். கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தவறு செய்தால் அவரையும் விமர்சனம் செய்வேன் என்று கமல்ஹாசன் பேட்டியில் கூறியுள்ளார்.

நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்தில் ஒரு நிருபர் ‘உங்கள் நண்பர் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தால் அவருக்கு உங்களுடைய ஆதரவு இருக்குமா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த கமல், ‘ரஜினி அரசியலுக்கு வந்து நியாயமாக இருந்தால் நல்லது நடக்கும். இல்லையென்றால் என் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அவருக்கும் இருக்கும்’ என்று கூறினார்.

மேலும் ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று கூறியது குறித்து கூறிய கமல், ‘இதே சிஸ்டம் குறித்து நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளேன். நான் சொன்னதை எனது நண்பர் வழிமொழிந்துள்ளார். அதற்கு அவருக்கு நன்றி’ என்று கூறினார்.