IAF pilot Abhinandan 

இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய போர்ப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அப்போது அவர் சென்ற மிக் 21 ரக விமானத்தை, பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர். இதனால் உடனடியாக அபிநந்தன், பாராசூட் மூலம் தரையில் குதித்தார். அவர், காற்றின் வேகம் காரணமாக பாகிஸ்தானில் போய் விழுந்தார். அவர் சென்ற விமானமும் வெடித்து சிதறியது. அபிநந்தனை கண்ட பாகிஸ்தானியர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், இரத்த வெள்ளத்தில் அபிநந்தனை இழுத்துச்சென்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைராகியது.

அதன் பிறகு அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் கிட்டத்தட்ட 50 மணி நேரம் இருந்துள்ளார். அங்கு அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் சித்ரவதை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் சித்ரவதை செய்யப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில் இப்போது சித்ரவதை செய்யப்பட்டது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.

பாரசூட்மூலம் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த அபிநந்தனை பாகிஸ்தானியர்களின் கொடூரமாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து மீட்டுசென்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனுக்கு எந்த சிகிச்சையும் முதலில் வழங்கவில்லை. உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட அபிநந்தனை நீண்ட நேரம் நிற்க வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக இந்திய போர் விமானங்கள் பயன்படுத்தும் சங்கேத குறியீடுகள், விமானப்படைத் தளங்களின் ரகசியங்களை கேட்டு துளைத்துள்ளனர். ஆனால் அபிநந்தனர் எந்த தகவலை யும் கூறிவில்லை. அதோடு காதுக்கு அருகே ஸ்பீக்கர்களை அதிக சத்தத்தில் அலற விட்டும் அபிநந்தனுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தண்ணீரை மேலே ஊற்றி அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 குழுக்கள் விசாரணை நடத்தியுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருந்துள்ளனர். முதல் 24 மணி நேரத்தில் கொடூரமாக விசாரித்துள்ளனர். அதன் பின்னர் தான், அவரிடம் விசாரணையில் கொஞ்சம் மென்மையாக நடந்து கொண்டுள்ளனர்.