களத்தில் உள்ள அம்பயர் எடுத்த முடிவிற்கு யாரும் விமர்சனம் தெரிவிக்க முடியாது என ஐசிசி ஓவர் த்ரோ சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டிகளை அடித்த காரணத்தினால் வெற்றி பெற்று இங்கிலாந்து கோப்பையை தட்டி சென்றது. ஆனால், நியூசிலாந்த் அணி வெற்றி பெற வேண்டும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், போட்டியின் சூப்பர் ஓவரின் போது கப்தில் வீசிய த்ரோ பவுண்டரிக்கு சென்றதால், இங்கிலாந்திற்கு 6 ரன்கள் கொடுக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு ஐசிசி செய்தி தொடர்பாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, போட்டி குறித்த எந்த ஒரு முடிவையும் களத்தில் உள்ள அம்பயரே முடிவெடுப்பார். அம்பயர்களின் முடிவில் எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஐசிசி அம்பயர் எடுத்த முடிவை சரியென குறிப்பிடுவது தெளிவாகியுள்ளது. ஆனால், முன்னாள் சர்வதேச அம்பயர் சைமன் டஃபெல் ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்தது அம்பயரின் தெளிவான குழப்பம் என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.