வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை 12 வது  ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக 10 அணிகள் தேர்வாகி உள்ளன. கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்தில் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  'டிக் டிக் டிக்' தீம் பாடலில் இணையும் இரு இசையமைப்பாளர்கள்

இதனையடுத்து இந்த உலகக்கோப்பைத் தொடருக்கான தீம் பாடலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தாண்டு உலகக்கோப்பைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஆண்ட்ரூ பிளிண்டாஃப் மற்றும் லோரின் ஆகியோர் நடித்துள்ளனர்.

அழகான துள்ளலிசைப் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.