ரேஸ்மியுடன் டேட்டிங் செய்ய இதை செய்தால் போதுமா. . .

 

            ‘கண்டேன்’, ‘மாப்பிள்ளை விநாயகர்’, ‘தவ்லத்’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரேஷ்மி கவுதம். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் நடித்தாலும் பேர் சொல்லும்படியாக எந்த படமும் இதுவரை நடிகைக்கு அமையவில்லை. தனது ஒரு படமாவது சூப்பர் ஹிட் ஆகிவிட்டால் அது தன்னை உயரத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்று எண்ணியிருக்கிறார்.
           அதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். ரேஷ்மி கவுதம் தெலுங்கில் நடித்துள்ள நெக்ஸ்ட் நுவ்வு படம் விரைவில் திரைக்கு வெளிவர இருக்கிறது. இந்த படம் தனக்கு நல்ல பெயரை பெற்று தரும் என மலையாய் நம்பியுள்ளார்.இப்படத்தை யார் ஒருவர் 5 ஆயிரம் முறை பார்க்கிறாரோ அவர் தன்னுடன் டேட்டிங் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
         வீடியோவை ரேஷ்மியே பதிவிட்டு வெளியிட்டிருப்பதால் இந்த தகவல், இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.   5 ஆயிரம் முறை படத்தை பார்த்த பிறகு ரேஸ்மி தங்களுடன் டேட்டிங் செய்வாரா என்று சில ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.