தல அஜித்தின் பிறந்த நாளான நேற்று அவரது ரசிகா்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அஜித்தின் 47வது பிறந்த நாளான நேற்று திரையுலக சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

47 வது பிறந்த நாளை அவருடைய ரசிகசிகாமணிகள் பல்வேறு விதங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு பகுதிகளில் உள்ள தல ரசிகா்கள் அவரது பிறந்த நாளான நேற்று தண்ணீா் பந்தல் மற்றும் நீர் மோர் போன்றவற்றை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். அஜித்தின் பிறந்த நாளுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி சுவராசிஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். நான் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அப்போது அஜித் சாரை சந்தித்தேன். அவா் ஜனா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். எனது நண்பன் ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்த உதவியவர் தான் அஜித் சார் என்று பாராட்டியுள்ளார். அன்றிலிருந்தே அவர் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. அஜித் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறி ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

நேற்று சுசீந்திரன் அஜித் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி போட் ட்வீட்டை தற்போது திரையுலக சேர்ந்த இலக்கியன் என்பவா் தனது வலைத்தள பக்கத்தில் அதற்கு பதில் அளித்துள்ளதாவது, இப்படி இயக்குநர் சுசீந்திரன் போட்ட செய்தி உண்மையில்லை. சுத்த பொய். இப்படி சுசீந்திரன் கூறி இருப்பது அவரது நண்பன் ரோஜா ரமணனின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித் சார் அந்த நேரத்தில் எந்தவொரு பணி உதவியும் பெரியதாக செய்யவில்லை. சுசீந்திரன் அஜித் சார் பற்றி புகழ்ந்து பேசியது அவரிடம் கால்ஷீட் வாங்கவே. இந்த செய்தி நடந்த சமயம் ஜனா பட சூட்டிங் கிடையாது. வில்லன் பட சூட்டிங் என்று இலக்கியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று சுசீந்திரன் போட்ட செய்தியை அனைவரும் ஷேர் செய்துள்ள நிலையில் தற்போது அதற்கு பதில் அளித்து இலக்கியன் பதிவு செய்ததிருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எது உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்என்றால் அஜித் நிறைய பேருக்கு நல்ல நல்ல உதவிகளை செய்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது இந்த மாதிரி இலக்கியன் கூறியது உண்மையா இல்லையா என்பது பற்றி இயக்குநர் சுசீந்திரன் தான் பதிலளிக்க வேண்டும்.