இசைஞானி இளையராஜா கிறிஸ்துவ மத நம்பிக்கைக்கு அவதூறாக பேசியதாக அவரது வீட்டின் முன் போராட்டம் செய்ய முயன்ற சிலர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மகான்கள் உயிர்த்தெழுந்து வந்தது குறித்து இளையராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. பகவான் ரமண மகரிஷி மட்டுமே 16 வயதில் உயிர்த்தெழுந்தவர் என்ற இளையராஜாவின் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் நேற்று சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்தனர்