நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

நான், சைத்தான், பிச்சைக்காரன், எமன், காளி, சலீம், அண்ணாதுரை என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் உருவான திமிறு பிடிச்சவன் படம் கடைசியாக வெளியாகி வெற்றியை பெற்றது. தற்போது கொலைகாரன், அக்னிச் சிறகுகள் என படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல், பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘தமிழரசன்’ என்கிற படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் “ எனது கனவு.. இளையராஜா சார்” என பதிவிட்டுள்ளார்.