இசைஞானி இளையராஜா அன்னக்கிளி படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி பலவித தாளக்கட்டுக்களை தமிழ் சினிமாவில் உருவாக்கி எளியவனும் கேட்கும் வகையில் பல கர்நாடக சங்கீத பாடல்களை கூட அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் எளிய முறையில் உருவாக்கி கொடுத்தவர்.

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் எத்தனை ஜென்மம் ஆனாலும் எத்தனை தலைமுறை புதிதாய் வந்தாலும் இவரது பாடல்களை கேட்காமல் இருக்க போவதில்லை.

இரவு நேரத்தில் அழும் குழந்தை, அதிகமான மன அழுத்தம் உள்ளவர்கள், சொல்ல முடியாத பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்கள், காதலில் பிரிந்தவர், கல்யாணம் முடிந்து பிரிந்தவர், இவரது உருக்கும் சோகபாடல்களை கேட்டால் இளகுவான மனமாக அவர் மனம் மாறிவிடும்.

அதே போல் சந்தோஷ தருணங்களான காதல், கல்யாணம், கோவில் விழாக்கள் என அனைத்துக்கும் இளையராஜா இசையே பிரதானம்.

இப்படி கால் நூற்றாண்டுக்கும் மேலாக இசை சாதனை படைத்து வருகிறார் இளையராஜா .இவரது பாடல்களை பிரபலமான சிங்கப்பூர் மெளண்ட் எலிசபெத் மருத்துவமனை மன நல ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மருத்துவ ரீதியாக பயன்படுத்தி பார்க்க இருப்பதாக சில தகவல்கள் கசிகின்றன.

இளையராஜாவின் ஊருசனம் தூங்கிருச்சு, காத்திருந்து காத்திருந்து, என் ஜீவன் பாடுது, மலையோரம் வீசும் காற்று, தேடும் கண்பார்வை, பாடுநிலாவே, எங்கிருந்தோ இளங்குயிலின் என இன்னும் கட்டுரையில் எழுத முடியாத அளவு பாடல்களை கேட்டால் எப்படிப்பட்ட மன அழுத்தமும் நீங்கும் என்பது உறுதி.