இசைஞானி இளையராஜாவுக்கும் பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கும் இடையே கடந்த வருடம் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் அறிந்தவையே,

நீண்ட நாட்களாக இளையராஜா இசையமைத்த பலவித அற்புத தாளக்கட்டுக்களோடு அமைந்த எஸ்.பி.பி பாடல்களை ரசித்த ரசிகர்கள் கூட இளையராஜா எஸ்.பி.பி இடையே ஏற்பட்ட இந்த காப்பிரைட்ஸ் பிரச்சினையால் பெரிதும் மன வருத்தம் அடைந்தனர்.

தன் பாடல்களை உரிய அனுமதி இல்லாமல் மேடையில் பாடக்கூடாது என இசைஞானி சொல்லி இருந்தார். நெருங்கிய நண்பர்களாக பல வருடம் இவர்கள் இருந்து வந்ததால் இவர்களுக்குள் இருந்த மனவருத்தம் இருவரது இசை ரசிகர்களையும் வெகுவாக பாதித்தது.

இந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியில் தனது நண்பரும் இசையமைப்பாளருமான இசைஞானியை பற்றி நெகிழ்ச்சியுடன் பல விஷயங்களை கூறியுள்ளார்.

இளையராஜா நூறு படம் இருந்தாலும் நாலு படம் இருந்தாலும் வொர்க் டெடிகேஷன் உள்ளவர் காலையிலேயே ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார்.மிகுந்த உழைப்பாளி மிக அறிவார்ந்த பாடலாசிரியர், தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ளவே மாட்டார்.

அந்த அளவு கடும் உழைப்பாளி, ஆல் இந்தியா முழுவதும் அவர் எங்கே சென்றாலும் இசைஞானி இளையராஜாவா என்று எழுந்து நின்னு அனைவரும் மிகுந்த மரியாதை செலுத்துவார்கள் எல்லோருமே மிகுந்த மரியாதையை இவர் மீது வைத்திருக்கிறார்கள்.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி தளபதி படப்பாடல் கம்போசிங்கிற்காக மும்பை சென்றிருந்த போது அங்கிருந்த இசைக்கலைஞர்கள் அனைவரும் நாங்க இங்க ஜிங்கிள்ஸ்லாம் பண்ணிக்கிட்டு நிறைய தவறு செஞ்சுக்கிட்டு மியூசிக் செஞ்சு எங்க பிழைப்பை ஓட்டுகிறோம்

நீங்க இங்க வந்து மியூசிக் பண்ணினா எங்க பிழைப்பு போய்விடும் என்ன டெடிகேஷன் பண்றார் ராஜா அவர்கிட்ட வாசிக்கிறது முன்னால செத்து சுண்ணாம்பு ஆகி விடுகிறோம் அவர் மியூசிக் டிக்‌ஷனரி அவர்கிட்ட நாம எதுவும் பேசவே முடியாது என்றனராம்.

இவ்வாறு இளையராஜவுடனான தன் இனிமையான நினைவுகளை எஸ்.பி.பி அவர்கள் பகிர்ந்து கொண்டார்.