இசைஞானி இளையராஜா பல வருடங்களாக இசையமைத்த பாடல்களில் எஸ்.பி.பியின் பாடல்கள் அதிகம். இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன் எஸ்.பி.பி தனது இசையமைப்பில் வந்த பாடல்களை பாடக்கூடாது என இளையராஜா கூறினார் வக்கீல் நோட்டிசும் அனுப்பப்பட்டது.

நெருங்கிய நண்பர்களான எஸ்.பி.பிக்கும் இளையராஜாவுக்குமான இந்த திடீர் மோதல் ரசிகர்களை கவலையடைய வைத்தது.

இதையும் படிங்க பாஸ்-  96 திரைப்படமும் இளையராஜா இசையும்

இந்நிலையில் எஸ்.பி.பி நான் தொடர்ந்து இளையராஜா பாடல்களை பாடுவேன் என்று கூறினார். எந்தெந்த பாடல்களில் அவருக்கு உரிமை உள்ளது என தெரிவிக்க வேண்டும் எனவும் ஒரு நண்பனான எனக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது வருத்தத்தை அளித்தது எனவும் கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  மேற்கு தொடர்ச்சி மலை கதாநாயகனுக்கு விஜய் சேதுபதி வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போன்

மற்றபடி இளையராஜா பாடல்களை தொடர்ந்து பாடுவேன் அவரின் இசையில்தான் அதிகம் பாடி இருக்கிறேன் இந்த மாதிரி செய்துட்டாரேன்னு அவர் மீது இம்மியளவு கெளரவம் குறையவில்லை. அவர் பாடல்களை தொடர்ந்து பாடுவேன் வக்கீல் நோட்டீஸ் வந்தால் எதிர்கொள்வேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா கடும் எச்சரிக்கை...

ஒரு இசையமைப்பாளராக அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரது காலை தொட்டு வணங்க கூட தயங்க மாட்டேன் என கூறியுள்ளார்.