ஆஸ்திரேலிய நிருபரின் கேள்விக்கு இளையராஜா அசத்தல் பதில்

ஆஸ்திரேலியாவுக்கு இசைநிகழ்ச்சிக்காக சென்றுள்ள இளையராஜா அங்குள்ள தமிழ் நிருபர்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அதில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இளையராஜா நான் யாருக்கும் எதுவும் சொல்லிதருவதில்லை என்னிடம் பாடுபவர்களுக்கு சொல்லித்தருவதோடு சரி என்றார். அப்போது இடைமறித்த நிருபர் ஒருவர் அப்போ நாலெட்ஜ் உங்களோடவே நின்றுவிடுமே என்றதற்கு நிற்காது சார், நீங்கள்ளாம் என்னோட பாட்ட பாடுறதில்லையா பாடுற அளவு நாலெட்ஜ் இருப்பதால் தானே பாடறிங்க அப்புறம் எப்படி நாலெட்ஜ் நிற்கும் என்றும் சுவாரஸ்யமாகவும் ஜாலியாகவும் பதிலளித்தார்.