Connect with us

செய்திகள்

இப்ப வர பாட்டுலாம் கேட்காதீங்க – இப்படி சொல்லி விட்டாரே இசைஞானி

Published

on

பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமெனில் தற்போது வரும் சினிமா பாடலை கேட்காதீர்கள் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

இளையராஜ பொதுநிகழ்ச்சிகளில் அரிதாகத்தான் கலந்து கொள்கிறார். சமீப காலமாக அவர் கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து உரையாடி வருகிறார். அப்போது திரை இசை பற்றியும், இசை என்றால் என்ன என்பது பற்றியும் விளக்கி வருகிறார். இசை தொடர்பாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.

சமீபத்தில் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் அவர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்பு உரையாடினர். அப்போது, தற்போது சினிமாத்துறையில் பாடல்களை காப்பி அடிக்கும் பழக்கம் உள்ளது. அதுபோல் இல்லாமல் சொந்த சிந்தனையாக இருக்க வேண்டும். பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமெனில் சினிமா பாடல்கள் கேட்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில், தற்போது எலக்ட்ரானிக் சாதனங்களே இசையை கொண்டு வருகிறது. அதை கேட்கும்போது உங்களின் மூலை செயல்படாமல் போய்விடும்” என அவர் எச்சரித்தார்.

Trending