Ilayaraja warning – தன்னுடைய புகைப்படத்தை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களின் போது சில அரசியல் கட்சிகள் நடிகர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. ஆனால், இந்த முறை சில அரசியல் கட்சிகள் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இளையராஜா தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் “சில அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான வாக்குகளைப் பெற இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் அவரது பெயரையோ அல்லது அவ‌ர‌து புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த வேண்டாம்‘’ என குறிப்பிடப்பட்டுள்ளது.