Ileana
Ileana

நடிகை இலியானா கர்ப்பம் அடைந்துள்ளார் என வெளியான செய்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் கொடி கட்டிப்பறந்த நடிகை இலியானா, பர்ஃபி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், தெலுங்கில் அவர் அதிக படங்களில் நடிக்கவில்லை. வெளிநாட்டு காரர் ஒருவரோடு காதலிலும் விழுந்தார். அவர் காதலுடன் நெருங்கி பழகியதில் கர்ப்பம் அடைந்துள்ளார் என சமீபத்தில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள இலியனா “20 வயதில் நடிக்க வந்தேன். தற்போது 32 வயதாகிறது. நான் கர்ப்பம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. நான் திருமணம் செய்து கொள்ளவும் இல்லை.. கர்ப்பம் அடையவும் இல்லை. என் சொந்த வாழ்க்கை குறித்து யாரிடம் பகிர்ந்து கொள்ள விருப்பமும் இல்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பின் நான் மனதளவில் வலுவடைந்துள்ளேன்” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.