abirami

பிரியாணிக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலில் விழுந்த குன்றத்தூர் அபிராமி தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது செயலை கண்டு ஊரே கொதித்து போய் இருக்கிறது. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது. அபிராமின் தவறான நட்பால் தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது.

கள்ளக்காதலுடன் சோ்ந்து டப்ஸ்மேஷ் செய்துள்ளார் அபிராமி. உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு தனது கணவர் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த ஸ்கூட்டி வைத்து கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளார். வித விதமாக டப்ஸ்மேஷ் செய்து ஜாலியாக வீடியோ வெளியிட்டு பார்ப்பவர்களை கவரும் விதமாக லிப்ஸ்டிக் போட்டு ஸ்டைலீஷாக நடித்துள்ளது வெளியே வைரலாகி வருகிறது.

தற்போது ஆண் பெண் என்று வயது வித்தயாசமில்லாமல் டப்மாஷ் என்ற பெயரில் பல கொடுமைகள் அரங்கேறி வருகிறது. அதுவும் மியூசிக்கில் ஆப்பில் நடக்கும் குத்துகள் எல்லாம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது. அதில் கணவன் மனைவி அந்தரங்க செயல்கள் வரை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இந்த மாதிரி பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. அப்படி தான் அபிராமியின் வாழ்க்கையும் பாழாய் போனது. அப்படி ஏற்பட்ட நட்பின் மூலம் ஏற்பட்ட கள்ளக் காதலால் தன் பெற்றெடுத்த இரு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொன்று தற்போது ஜெயிலில் தள்ளப்பட்டுள்ளார். ஜெயிலில் களி தின்று வரும் கள்ளக்காதல் அபிராமி இதுவரை வாய் திறந்து எதுவும் பேசாமல் இருந்து வந்தார். தற்போது தனது வாழ்க்கை இந்த மியூசிக்கலி ஆப்பால் இப்படி பாழாகி போய்விட்டது என மனம் குமுறி வருகிறார். சிறையில் இருக்கும் மற்ற கைதிகளிடம் தற்போது மனம் விட்டு பேசி இருக்கிறார் அபிராமி.